ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி

உளுந்தூர்பேட்டையில் சோகம் ஏரியில் மூழ்கி மூதாட்டி பலி கணவரை தேடி சென்றபோது தவறி விழுந்த பரிதாபம்

Update: 2022-09-09 17:23 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சின்ன கண்ணு(வயது 67). தொழிலாளியான இவர் திடீரென மாயமானதை அடுத்து அவரது மனைவி சுந்தராபாய்(65) கணவரை தேடி அலைந்தார். அப்போது அதே ஊரில் உள்ள ஏரிக்கு தேடிச்சென்றபோது எதிர்பாராதவிதமாக அவர் தவறி ஏரியில் விழுந்தார். இதில் நீச்சல் தெரியாத சுந்தராபாய் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது பற்றிய தகவல் அறிந்து வந்த எடைக்கல் போலீசார் சுந்தராபாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன கணவரை தேடி சென்றபோது தவறி விழுந்து ஏரியில் மூழ்கி மூதாட்டி பலியான சம்பவம் ஆர்.ஆர்.குப்பம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படு்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்