மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலியானார்.;
தூத்துக்குடி கோரம்பள்ளம் இ.பி.காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 65). இவர், தனது மகன் மகேஷ் (45) என்பவருடன் மடத்தூர்-சோரீஸ்புரம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு குடோன் அருகே மோட்டார் சைக்கிள் வந்த போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த சுப்புலட்சுமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.