மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2023-02-25 19:41 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 65). இவர் கடந்த 21-ந் தேதி தனது உறவினர் நாகராஜ் என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நூத்தப்பூரில் இருந்து பில்லங்குளத்திற்கு சென்றுள்ளார்.

பில்லங்குளம் பகுதியில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சின்னம்மாள் கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்