மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி

மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானர்.

Update: 2023-10-01 18:45 GMT

கமுதி, 

கமுதி அருகே தீக்குடி கிராமத்தை சேர்ந்தவர் நல்லதம்பி மனைவி சீதா(வயது 62). இவர் இதே ஊரை சேர்ந்த சிறுவனுடன் மோட்டார்சைக்கிளில் தீக்குடியில் இருந்து பெருநாழிக்கு சென்றார். சிம்ம நாதபுரம் விளக்கு சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மூதாட்டி சீதா நிலை தடுமாறி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருநாழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்