ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

வாணியம்பாடியில் ரெயிலில் அடிபட்டு மூதாட்டி பலியானார்.

Update: 2022-12-07 18:50 GMT

டெல்லியில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று ஜோலார்பேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடி ரெயில்நிலையம் அருகே வந்தபோது சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடந்துள்ளார். அவர் மீது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணி மற்றும் போலீசார் சென்று ரெயிலில் சிக்கி பலியான மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவுசெய்து இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்