ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலி

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலியானார்.

Update: 2023-02-04 17:47 GMT

குடியாத்தம்

ஆட்டோ கவிழ்ந்து மூதாட்டி பலியானார்.

குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் காவாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 90). நேற்று மதியம் மூதாட்டி லட்சுமி, தனது வீட்டிற்கு செல்ல ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். குட்டைமேடு அருகே சென்று கொண்டிருந்தபோது லண்டன்பட்டியைச் சேர்ந்த தர்ஷன்குமார் (19) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் மோதிக்கொண்டன.

அப்போது ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த மூதாட்டி லட்சுமி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கிராம மக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர.் அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது மூதாட்டி லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த தர்ஷன்குமாரும் பலத்த காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்