சாலையோரத்தில் மூதாட்டி பிணம்

சாலையோரத்தில் மூதாட்டி பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-12-05 18:40 GMT

ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் உணவின்றி தவித்து வந்தார். அவருக்கு பொதுமக்கள் உணவளித்து ஆதரவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் அந்த மூதாட்டி சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள பாதர் கெசு சாலை ஓரத்தில் இறந்து கிடந்தார். இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவகுமார் ஜோலார்பேட்டை போலீ்ஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப்- இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்