மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை
கடையம் அருகே மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் பாரதி நினைவு நகர் பகுதியை சேர்ந்தவர் மகமாயி (வயது 77). இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மகமாயி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி அவரது மகள் வாசுகி கொடுத்த புகாரின் பேரில், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரணை நடத்தி வருகிறார். அவரது மகன் ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக உள்ளார்.