பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-19 19:00 GMT

திருவாரூர்;

திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் அமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தம்பிதுரை தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் மாதவராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர்கள் சங்கம் சார்பில் பிற துறைகளுக்கு பணி மேலாண்மை அதிகாரம் வழங்கும் முடிவை கைவிட வேண்டும். தமிழக அரசின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .

Tags:    

மேலும் செய்திகள்