பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-04-24 18:57 GMT

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிழக்கு மண்டலம் மற்றும் வட மத்திய மண்டல இயக்க பொறுப்பாளர்களுக்கான பயிலரங்கம் பாபநாசத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட செயலாளர் மதியழகன் வரவேற்று பேசினார். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்து பேசினார். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில், முன்னாள் வட்டார கல்வி அலுவலர் மனோகரன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் மகாலட்சுமி, அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட தலைவர் கலைச்செல்வன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தொழிலாளர்களுக்கு விரோதமாக கொண்டு வந்துள்ள தொழிற்சாலை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டத்தை மேற்கொள்ள ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி முடிவு செய்ய உள்ளனர்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்