பேத்தியை கர்ப்பமாக்கிய முதியவர், போக்சோ சட்டத்தில் கைது

நன்னிலம் அருகே பேத்தியை கர்ப்பமாக்கிய முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-10-14 18:45 GMT

நன்னிலம்:

நன்னிலம் அருகே பேத்தியை கர்ப்பமாக்கிய முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்தவர் 72 வயது முதியவர். இவர் தனது பேத்தியான 14 வயது சிறுமியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து பெற்றோர், சிறுமியை சிகிச்சைக்காக குடவாசல் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

போக்சோ சட்டத்தில் முதியவர் கைது

ஆஸ்பத்திரியில் டாக்டா்கள், சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்