பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி விழுந்தது.;
குழித்துறை:
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி விழுந்தது.
பெண்ணிடம் சில்மிஷம்
மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து பல ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து இனையத்திற்கு செல்வதற்காக ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சுக்குள் சில பயணிகள் அமர்ந்திருந்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனது கணவருடன் ஒரு சீட்டில் அமர்ந்திருந்தார். அந்த சீட்டுக்கு பின்னால் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் கையில் ஒரு பையுடன் அமர்ந்திருந்தார்.
அப்போது அவர் தனது காலினால் அந்த பெண்ணின் காலை தடவி அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அதைதொடா்ந்து மீண்டும் சிறிது நேரம் கழித்து தனது கையால் அந்த பெண்ணின் கழுத்தையும், கன்னத்தையும் தடவினார். உடனே அந்த பெண் தனது கணவரிடம் விவரத்தை தெரிவித்தார்.
முதியவருக்கு தர்ம அடி
உடனே அந்த பெண்ணின் கமார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி விழுந்தது.
பெண்ணிடம் சில்மிஷம்மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு தர்ம அடி விழுந்தது.
பெண்ணிடம் சில்மிஷம்ணவர் அந்த முதியவரிடம் தட்டி கேட்டார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பஸ்சுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பெண்ணின் கணவர் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் சேர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவரை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் பஸ் நிலையத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பயணிகளிடமிருந்து அந்த முதியவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் இனையம் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.