அரசு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட முதியவர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில், சாலையை கடக்க முயன்றபோது, அரசு பேருந்து மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.

Update: 2022-11-06 17:22 GMT

ஆரல்வாய்மொழி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில், சாலையை கடக்க முயன்றபோது, அரசு பேருந்து மோதியதில், முதியவர் உயிரிழந்தார்.

மகாராஜன் என்பவர், அங்குள்ள சந்திப்பில் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில், தூக்கி வீசப்பட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை, அப்பகுதி மக்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்தார். முதியவர் மீது மோதியது நன்றாகத் தெரிந்தும், அந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து, சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்