விஷம் தின்று முதியவர் தற்கொலை

தஞ்சை அருகே விஷம் தின்று முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-08-29 20:36 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 61). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை (எலி பேஸ்ட்) தின்று விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் முதியவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து எதற்காக பெருமாள் தற்கொலை செய்து கொண்டார்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்