மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.;

Update: 2023-06-02 18:55 GMT

தென்னிலை அருகே உள்ள வைரமடையை சேர்ந்தவர் ராமசாமி (வயது 69). இவர் தனது மோட்டார் சைக்கிளில் தென்னிலை அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக நேற்று காலை கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கரூரில் இருந்து தென்னிலை நோக்கி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ராமசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் ராமசாமி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் தில்லைக்கரசி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்