மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Update: 2023-07-31 19:30 GMT

கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 60). இவர் ஓசூரில் குடியிருந்து வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். அந்திவாடி- தளி சாலையில் மொபட்டில் வந்தார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அண்ணாமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் விரைந்து வந்து அண்ணாமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்