நெகமம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்-போலீஸ் விசாரணை
நெகமம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த முதியவர்-போலீஸ் விசாரணை
நெகமம்
நெகமம் அடுத்த கோப்பனூர்புதூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). இவர் கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் கோகுல்பிரசாத் நெகமம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கோப்பனூர்புதூர் அருகே சென்னாம்பாறை தோட்டத்தில் உள்ள கிணற்றில் சோமசுந்தரம் பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோமசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சோமசுந்தரம் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.