ரெயில் நிலையத்தில் முதியவர் பிணம்

நாகை ரெயில் நிலையத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.

Update: 2023-01-23 18:45 GMT

நாகை ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் நேற்று முன்தினம் இரவு 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பயணிகள், அருகிலுள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துகிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து, ரெயில் நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர்? அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை ரெயில் நிலையத்தில் முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அங்கிருந்த பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்