சிவகாசி,
சிவகாசி மேற்கு பகுதியில் உள்ள ரிசர்வ்லைன் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 59). இவர் தனது மனைவி முத்து விநாயகியுடன் வசித்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கணேசனுக்கு மார்பில் புற்றுநோய் கட்டி ஏற்பட்டு அதனை மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அகற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கணேசனுக்கு இடது கையில் வீக்கம் ஏற்பட்டு அதில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது. விஷ வண்டு கடித்ததால் ரத்தகசிவு ஏற்பட்டு இருக்கும் என்று நினைத்து சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அவரது மகன் முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.