மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி முதியவர் பலியானார்.

Update: 2023-07-22 18:57 GMT

தென்னிலை அருகே உள்ள கூனம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு தென்னிலையில் இருந்து கூனம்பட்டிக்கு கரூர்-கோவை சாலையில் தனது ேமாட்டார் ைசக்கிளில் சென்று கொண்டிருந்தார்.ெதன்னிலை அருகே உள்ள அமிர்தபுரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கரூரில் இருந்து வெள்ளக்கோவிலை நோக்கிச் சென்ற கார், சந்திரசேகரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரசேகரன் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (65)படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிைல ேபாலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த சக்திவேலை மீட்டு சிகிச்ைசக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சந்திரசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்