டிப்பர் லாரி மோதி முதியவர் சாவு

மதுரை அருகே டிப்பர் லாரி மோதியதில் முதியவர் பலியானார்.

Update: 2023-04-17 20:00 GMT

மதுரை ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்தவர் மணிகாளை (வயது 70). சம்பவத்தன்று இவர், கடச்சனேந்தல்- ஊமச்சிகுளம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் வாடிப்பட்டியை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் பாஸ்கரன் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்