கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் தண்டவாளம் அருகில் ரெயிலில் அடிபட்டு முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக தூத்துக்குடியில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் பிணமாக கிடந்தவர், கோவில்பட்டி பங்களா
தெருவை சேர்ந்த கருப்பசாமி (வயது 75) என தெரிய வந்தது.இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர் மீது 2021-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி நாலாட்டின்புத்தூர் போலீஸ் சரகத்தில் உறவினரை சொத்து பிரச்சினை காரணமாக இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. சமீபத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள மனைவி ராஜலட்சுமிக்கு ஒரு கால் அகற்றப்பட்டதால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற கருப்பசாமி ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்துள்ளார். பிணத்தை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் இறந்தது எப்படி? என விசாரணை நடத்தி வருகின்றனர்.