மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

புதுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-02-23 18:45 GMT

புதுக்கோட்டை அருகே மேலத்தட்டப்பாறையைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 75). விவசாய கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இரவு மேலத் தட்டப்பாறையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அந்த பகுதியில் வடக்கு சிலுக்கன்பட்டி, மடத்துப்பட்டியை முனீசுவரன் (26) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பொன்னுச்சாமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பொன்னுச்சாமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்