சரக்கு வாகனம் மோதி முதியவர் பலி
சாயல்குடி அருகே சரக்கு வாகனம் மோதி முதியவர் பலியானார்.
சாயல்குடி,
தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்நாடார் (வயது 70). இவர் சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்றார். அப்போது. சாயல்குடியில் இருந்து கன்னிராஜபுரம் நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்குபதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் சுடலைவேலை(30) கைது செய்தார்.