சங்ககிரி:-
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 79). இவர் கோவிலுக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு தனது மொபட்டில், சேலம் நோக்கி வந்துள்ளார். அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே குப்பனூர் மேம்பாலத்தில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த பழனிசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்ககிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் சரக்கு ஆட்டோ டிரைவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பிரபு (33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.