படந்தாலுமூடு அருகே கார் மோதி முதியவர் சாவு
படந்தாலுமூடு அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.;
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் வடக்குலெனன்சிமாவிளையை சேர்ந்தவர் சிந்தாமணி (வயது 75). இவர் திருத்துவபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று படந்தாலுமூடு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் சிந்தாமணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிந்தாமணி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக கார் டிரைவர் மீது களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.