வாலாஜா அருகே உள்ள தேவதானம் கிராமம் ஒத்த வாடை தெருவை சேர்ந்தவர் பூபதி (வயது 60). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரமாக டீக்கடைக்கு சென்றார். தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றபோது வேலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார், பூபதி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.