வாடிப்பட்டி அருகே முதியவர் பிணம்
வாடிப்பட்டி அருகே முதியவர் பிணம் கிடந்தது
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பகுதியில் அணுகு சாலை உள்ளது. இந்த அணுகு சாலையில் கண்மாய்கரை அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. அவர் வெள்ளை நிற கோடு போட்ட சட்டையும், பச்சை கலர் கைலியும் கட்டி இருந்தார். இது குறித்து தனிச்சியம் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், மாயாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறந்தவா் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.