சிவகாசி,
திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலபட்டியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 72). இவர் கடந்த சில மாதங்களாக கால் வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இந்த வலியை தாங்க முடியாமல் அடிக்கடி மது குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சுப்பையாவை பல இடங்களில் தேடி உள்ளனர். இதற்கிடையில் சுப்பையா அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு சென்ற சிவகாசி கிழக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முதியவர் சுப்பையா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.