லாரி மோதி முதியவர் சாவு

திருக்காட்டுப்பள்ளி அருகே லாாி மோதி முதியவர் உயிரிழந்தார்

Update: 2022-07-26 21:19 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி - திருவையாறு சாலையில் உள்ள மரூவூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது85). இவர் பவனமங்கலம் தனியார் இரு சக்கர வாகன விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நடராஜன் மீது மோதியது. இதில் நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நடராஜன் உறவினர் மகாராணி திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மயிலாடுதுறை மாவட்டம் காவல்மேடு கிராமத்தை சேர்ந்த ராஜா(36) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ருகிறார்கள்.;

Tags:    

மேலும் செய்திகள்