தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

Update: 2022-10-20 18:45 GMT

சிவகாசி

சிவகாசி பாரைப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் ராஜா(வயது 68). இவர் தனது மகன் கடற்கரைச்சாமியின் பராமரிப்பில் இருந்து வந்தார். முதியவர் ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்னர் டீக்குடிக்க சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இடுப்பில் காயம் ஏற்பட்டு அவதி அடைந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் மேல்மாடியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடற்கரைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

மேலும் செய்திகள்