நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை

நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-30 20:17 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் மேலஆசாரிபள்ளம் அம்மன் கோவில் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 29). இவருடைய தந்தை காசிராஜன் (60). மதுரையை சேர்ந்த இவர் தற்போது மகனுடன் மேல ஆசாரிபள்ளத்தில் வசித்து வந்தார். காசிராஜன் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று இரவும் காசிராஜன் தனது மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆசாரிபள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காசிராஜனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்