முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே சிங்கராயபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அந்தோனிசாமி(வயது 80). கூலி தொழிலாளியான இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலையில் அருகில் உள்ள முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் அந்தோனிசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது மகன் இமியோன் புகார் அளித்தார். புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.