ரெயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை

திருச்செந்தூர்ரெயில் நிலையம் அருகில் ரெயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-09 10:29 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. ரெயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதில் முதியவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணமாக கிடந்த முதியவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது சட்டை காலரில் முத்து, சென்னை என ெடய்லர் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் கட்டம் போட்ட சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நெல்லை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்