மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-11 18:22 GMT

மது குடிக்க மனைவி பணம் தராததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மது குடிக்க பணம்...

முசிறி அருகே உள்ள வெள்ளூரை சேர்ந்தவர் விசுவநாதன் (வயது 62). கடந்த 8-ந்தேதி இவர் வீட்டுக்கு மது குடித்துவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் மீண்டும் மது குடி வேண்டும் என்றும், ஆதனால் பணம் தரும்படி மனைவி கற்பகத்திடம் தகராறில் ஈடுபட்டார்.

ஆனால் கற்பகம் பணம் இல்லை என்று கூறிவிட்டார். இதனால் அவர் கோபத்துடன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். மேலும் இவர் அடிக்கடி வீட்ைட விட்டு செல்வதும், இரண்டு அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிடுவது வழக்கம். இதனால் அவரை வீட்டில் யாரும் தேடவில்லை.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள தைலமரக்காட்டில் வனகாவலர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அங்கு சென்று பார்த்தபோது, விசுவநாதன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் அவர் மது குடிக்க பணம் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிரைவர் தற்கொலை

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 27). டிரைவரான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சரவணன் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்