4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் கைது

Update: 2022-12-23 21:13 GMT

குளச்சல்:

இரணியல் அருகே உள்ள அப்பட்டுவிளையை சேர்ந்தவர் செல்வராஜன் (வயது60), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்லும் போது தடுத்து நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வராஜன் ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்டு மருந்து சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்