4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் கைது

Update: 2022-11-06 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தில் 4 வயது சிறுமி அவளது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன்(வயது 65) என்பவர் விளையாட செல்லலாம் என்று கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதன் பின்னர் சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை அவளது பெற்றோரிடம் கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தில் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்