மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது நேரு நகர் பகுதியில் உள்ள பாலம் அருகே கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. உடனே இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு மொபட்டில் சந்தேகப்படும்படியாக இருந்த முதியவரை பிடித்து விசாரித்தனர். அதில் நேரு நகர் அகத்தியர் தெருவை சேர்ந்த காசி மாயன் (வயது 62) என்பதும், இவர் மொபட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 700 கிராம் கஞ்சா, செல்போன், மொபட் மற்றும் ரூ.22 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.