கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் எம்.ஜி.ஆர். காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கையில் பையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து சோதனை செய்தனர். அதில் பையில் 120 கிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த பாலு (வயது 71) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா விற்ற ரூ.2,800 பறிமுதல் செய்யப்பட்டது.