புனுகு பூனையை வேட்டையாடிய முதியவர் கைது

சிறுமலை வனப்பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடிய முதியவர் கைது செய்யப்பட்டார். துப்பாக்கி, தோட்டா, அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-24 15:21 GMT

திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை தாழைக்கடை பகுதியை சேர்ந்தவர் முத்தன் (வயது 65). இவர், சிறுமலை வனப்பகுதியில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் நாகையா தலைமையிலான வனத்துறையினர், முத்தனின் வீட்டில் நேற்று முன்தினம் திடீர் சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டுக்குள் புனுகு பூனையின் உடல் பாகங்களை காய வைத்திருந்ததை வனத்துறையினர் கண்டனர்.

இதனையடுத்து முத்தனை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் புனுகு பூனையை வேட்டையாடி இறைச்சியை சமைத்து சாப்பிட்டு விட்டதாகவும், மருந்து மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிப்பதற்காக அதன் உடல் பாகங்களை காய வைத்து விற்பனை செய்ய இருப்பதாகவும் முத்தன் தெரிவித்தார்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் பிரபு உத்தரவின் பேரில், சிறுமலை வனச்சரகர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் முத்தனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, தோட்டா, அரிவாள், புனுகு பூனையின் உடல் பாகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்