மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது
மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த தங்கராசுவின் மனைவி காளியம்மாள்(வயது 68). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் மா, தென்னை மரங்களை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன்(63), மாமரத்தில் உள்ள மாங்காய் மற்றும் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்துக் கொண்டு இருந்தார். இது பற்றி காளியம்மாள் கேட்டபோது, நடராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காளியம்மாள் அளித்த புகாரின்பேரில், நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.