மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர், சிறுமி பலி

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் முதியவர், சிறுமி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-04-29 14:40 GMT

செய்யாறு

செய்யாறு அருகே மோட்டார்சைக்கிள் மோதியதில் முதியவர், சிறுமி பரிதாபமாக இறந்தனர்.

விடுமுறையில்...

ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், இவரது மனைவி கிரிஜா. இவர்களின் மகள் ரூபிணி (வயது 8). இவர் அதே பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாராசூர் கிராமம் மேட்டு காலனி பகுதியை சேர்ந்த முனுசாமி தனது பேத்தியை பார்க்க ராணிப்பேட்டைக்கு சென்றார்.

பள்ளி விடுமுறை என்பதால் ராணிப்பேட்டையில் இருந்து பஸ்சில் தனது ஊருக்கு ரூபிணியை அழைத்து வந்தார். பாராசூரில் இருந்து மேட்டு காலனிக்கு செல்ல வெகுதூரம் என்பதால் அந்த வழியாக வந்த ஞானமுருகன் (34) என்பவரின் மோட்டார்சைக்கிளில் ரூபிணியை அனுப்பி வைத்தார்.

முதியவர், சிறுமி பலி

அவர் மோட்டார்சைக்கிளில் சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றார். இந்த நிலையில் பாராசூர் கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவர் தனது தந்தை எல்லப்பனை (70) மோட்டார் சைக்கிளில் பாராசூரில் இருந்து அழைத்து வந்து வீட்டின் அருகே இறக்கி விட்டார்.

அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஞானமுருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் எல்லப்பன், ரூபிணி, ஞானமுருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி எல்லப்பன், ரூபிணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்