மூதாட்டி தற்கொலை
திண்டுக்கல் அருகே மூதாட்டி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்து மேட்டூர் காலனியை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மனைவி சுப்புலட்சுமி (வயது 80). கடந்த சில மாதங்களாக இவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. நோய் கொடுமையால் மன உளைச்சலில் இருந்த சுப்புலட்சுமி, நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.