மூதாட்டி தற்கொலை
கூடலூரில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர் 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில்தெருவைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 60). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் சாவித்திரி வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இவரை உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு சாவித்திரி தற்கொலை செய்து ெகாண்டார். தகவல் அறிந்த கூடலூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் சாவித்திரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.