மூதாட்டி தற்கொலை

மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-18 19:45 GMT

நெல்லை முன்னீர்பள்ளம் அருகே உள்ள இட்டேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவனுதேவர் மனைவி அங்கம்மாள் (வயது 76). இவரது பேரன் மாரிமுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இதனால் அங்கம்மாள் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்