சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே சின்ன வதம்பச்சேரியை சேர்ந்தவர் நாகம்மாள்(வயது 78). கணவர் இறந்துவிட்டதால் மகன் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.இந்த நிலையில் நாகம்மாள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர், கடந்த 5-ந் தேதி கழிவறையில் பயன்படுத்த வைத்திருந்த பினாயிலை எடுத்து குடித்தார். இதன் காரணமாக மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நாகம்மாள் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.