சாலை விபத்தில் மூதாட்டி பலி
மயிலம் அருகே நடந்த சாலை விபத்தில் மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மயிலம்,
மயிலம் அருகே செந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலிவரதன் மனைவி எட்டியம்மாள் (வயது 70). இவர் தனது வீட்டில் இருந்து வயலுக்கு செல்ல அதே பகுதியில் உள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.