சோமரசம்பேட்டை கடைவீதியில் சாலையை கடக்க முயன்ற சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மொபட் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மொபட்டை ஓட்டி வந்தவர் மல்லியம்பத்து குடிதெருவை சேர்ந்த பெரியசாமி(வயது 40) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.