தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

தனியார் பஸ்சில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.;

Update: 2022-09-04 18:26 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, அகரம்சீகூர் காலனி தெருவை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கலியம்மாள் (வயது 75). விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் தனது மகள் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கலியம்மாள் நேற்று மதியம் அத்தியூருக்கு துக்க காரியத்துக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்புவதற்காக அத்தியூரில் இருந்து ஒரு தனியார் பஸ்சில் ஏறி பயணம் செய்தார். அகரம்சீகூர் காலனி தெரு நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துவதற்காக டிரைவர் மெதுவாக ஓட்டி வந்தாக கூறப்படுகிறது. அப்போது பஸ்சில் இருந்து இறங்குவதற்காக கலியம்மாள் படிக்கட்டு அருகே வந்த போது நிலைதடுமாறி, பஸ்சில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு கலியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்