தாறுமாறாக ஓடிய கார் மோதி மூதாட்டி பலி
செய்யாறு அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மூதாட்டி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
செய்யாறு
செய்யாறு அருகே தாறுமாறாக ஓடிய கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மூதாட்டி பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாறுமாறாக ஓடி விபத்து
நாகப்பட்டினத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர் வேலூர் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மகனை பார்ப்பதற்காக காரில் தனது தாயார் ராஜலட்சுமி, மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் செய்யாறு வழியாக சென்று கொண்டிருந்தார். செய்யாறு தாலுகா கணேசபுரம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி 100 நாள் பணிக்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்களின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கார் மோதியதில் படுகாயம் அடைந்தவர்களையும், விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்களையும் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதனிடையே கார் மோதியதில் படுகாயமடைந்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த குப்பு என்ற மூதாட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். அதனை தொடர்ந்து இந்த விபத்தில் காயமடைந்த கணேசபுரம் பகுதியை சேர்ந்த பச்சையம்மாள் என்ற மூதாட்டி மற்றும் காரில் பயணம் செய்த மணிமேகலை, ராஜலட்சுமி மற்றும் கார் டிரைவர் சரத்குமார் ஆகிய நான்கு பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
விபத்து குறித்து மோரணம் போலீசார் வழக்கு பதிந்து பலியான குப்புவின் உடலை பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.